தமிழக செய்திகள்

தீபாவளிக்கு முன்பாக அமைச்சரவையில் மாற்றம்: நயினார் நாகேந்திரன் மத்திய மந்திரியாகிறாரா?

மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகும் நிலையில், எல் முருகன் ராஜினாமா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் இணை மந்திரியாக இருந்தவர் எல்.முருகன்.தமிழகத்தைச் சேர்ந்தவரான எல்.முருகன், கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 7-ந்தேதி முதல் முறையாக மத்திய மந்திரியானார். அப்போது அவருக்கு தக வல்-ஒலிபரப்பு மற்றும் மீன்வளம், கால்நடை பராம ரிப்பு, பால்வளத்துறை இணை மந்திரி பொறுப்பு வழங்கப்பட்டது.2024-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, 3-வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றபோதும், எல்.முருகனுக்கு இணை மந்திரி பொறுப்பு வழங்கப்பட்டது.

மந்திரி பதவி ராஜினாமா

இந்த முறை தகவல்-ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை ஒதுக் கப்பட்டது. அவர் மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு இருமுறை தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்தநிலையில் எல்.முருகன், நேற்று தனது, மந்திரி பதவியை திடீரென்று ராஜி னாமா செய்தார். மேலும் நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்தும் விலகினார். விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகும் நிலையில், அவரது ராஜினாமா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் தேர்தல்

2029-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் அடுத்த ஆண்டு உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலும் நடக்க உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகவும், அந்த வகையில் உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக மேலிடம் திட்டம்

தமிழகத்தில் இருந்து மத்திய அமைச்சராக எல்.முருகன் மட்டுமே இருந்த நிலையில் அவரும் பதவி விலகியுள்ளார். இதனால், தற்போது தமிழக பாஜக தலைவராக உள்ள நயினார் நாகேந்திரன் நியமன எம்பியாக தேர்வு செய்யப்பட்டு, மத்திய அமைச்சராககூடும் என்ற பேச்சுகளும் அரசியல் வட்டாரத்தில் அடிபட துவங்கியுள்ளது. தமிழக பாஜக தலைவர் பொறுப்புக்கு வேறு ஒருவரை நியமித்து மக்களவை தேர்தலுக்கு முன்பாக கட்சியை வலுப்படுத்த பாஜக மேலிடம் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT