கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தமிழக அமைச்சரவையில் யார் யாருக்கு எந்த இடம்?: பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு!

முதல்-அமைச்சர் விஜய் உள்பட 35 அமைச்சர்களுக்கான பதவி மூப்பு பட்டியல் நேற்று வெளியிடப்பட்டிருந்தது.

சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று த.வெ.க. அரசு கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்ற நிலையில், அதன்பிறகு 35 பேர் கொண்ட அமைச்சரவையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்பிறகு, ஒவ்வொருவருக்குமான துறைகளும் ஒதுக்கப்பட்டது.

தற்போது, தமிழக அமைச்சர்களின் வரிசை பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே அமைச்சர்களுக்கு சட்டசபையில் இடம் ஒதுக்கப்பட்டு இருக்கும்.

இது தொடர்பாக, அரசு முதன்மை செயலாளர் எம்.சாய் குமார் அமைச்சரவை வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளார்.

ஜோசப் விஜய்

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

1.சி.ஜோசப் விஜய் - முதல்-அமைச்சர்

2.என்.ஆனந்த் - ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை

3.ஆதவ் அர்ஜூனா - பொதுப்பணி, நெடுஞ்சாலை, விளையாட்டு துறை

4.டாக்டர் கே.ஜி.அருண்ராஜ் - சுகாதாரத்துறை

5.கே.ஏ.செங்கோட்டையன் - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை

6.பி.வெங்கடரமணன் - உணவுத் துறை

7.ஆர்.நிர்மல்குமார் - மின்சாரம், நீதிமன்றங்கள், சிறைத்துறை

8.ராஜ் மோகன் - பள்ளிக்கல்வி, செய்தித் துறை

9.டாக்டர் டி.கே.பிரபு - இயற்கை வளங்கள் துறை

10.எஸ்.கீர்த்தனா - தொழில் துறை

11.பி.விஸ்வநாதன் - உயர் கல்வித்துறை

12.எஸ்.ராஜேஷ்குமார் - சுற்றுலாத் துறை

13.ஏ.எம்.ஷாஜகான் - சிறுபான்மையினர் நலத்துறை

14.வன்னி அரசு - சமூக நீதித்துறை

15. ஏ.விஜய் தமிழன் பார்த்திபன் - போக்குவரத்து துறை

16.பி.ராஜ்குமார் - வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை

17.வி.சம்பத்குமார் - பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்

18.எம்.விஜய் பாலாஜி - கைத்தறி, துணிநூல், காதி

19.கே.விக்னேஷ் - மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை

20.கே.தென்னரசு - வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை

21.ஜெ.முகமது பர்வேஸ் - தொழிலாளர் நலத்துறை

22.வி.காந்திராஜ் - கூட்டுறவுத் துறை

23.கே.ஜெகதீஸ்வரி - சமூக நலத்துறை

24.வினோத் - வேளாண்மைத் துறை

25.சி.விஜயலட்சுமி - பால்வளத்துறை

26.டி.சரத்குமார் - மனிதவள மேலாண்மை

27.ரமேஷ் - இந்து சமய அறநிலையத்துறை

28.பி.மதன்ராஜா - குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை

29.என்.மரிய வில்சன் - நிதித் துறை

30.ஸ்ரீநாத் - மீன்வளத் துறை

31.எஸ்.கமலி - கால்நடைத் துறை

32.ஆர்.குமார் - செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பத் துறை

33.ஆர்.வி.ரஞ்சித்குமார் - வனத்துறை

34.டி.லோகேஷ் தமிழ்செல்வன் - வணிகவரி, பத்திரப்பதிவு

35.ராஜீவ் - சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம்

SCROLL FOR NEXT