தமிழக செய்திகள்

கூட்டணி அமைக்காமல் திராவிட கட்சிகளால் தனித்து போட்டியிட முடியுமா? சீமான் சவால்

அரசியல்வாதிகள் எடுக்கிற கடைசி ஆயுதம்தான் ஓட்டுக்கு காசு. இலவச அறிவிப்புகள் என சீமான் கூறியுள்ளார்.

சிவகங்கை,

நாம் தமிழர் கட்சியின் சார்பில் சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர் இந்துஜா போட் டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சிகளால் இந்த நாட்டில் இருக்கிற தீமையை ஒழிக்க முடியாது. தங்கள் பிழைகளை மக்கள் கேள்வி கேட்காமல் இருக்க, நேர்மை யற்ற தங்களது ஆட்சி முறையை மக்களின் நினைவில் இருந்து மறைக்க, அரசியல்வாதிகள் எடுக்கிற கடைசி ஆயுதம்தான் ஓட்டுக்கு காசு. இலவச அறிவிப்புகள்.

நாட்டை பற்றியோ, நாட்டு மக்களை பற்றியோ சிந்திக்காமல் ஓட்டை பற்றியே கவலைப்படும் கூட்டம் இது. எங்களுக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள். உலகத்தின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவேன். திராவிட கட்சிகள் தைரியம் இருந்தால் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட முடியுமா?. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு முன்பு வேலுநாச்சியார் சிலை வைப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.