ஆலங்குடி கலைஞர் காலனியை சேர்ந்தவர் செல்வம் மகள் கார்த்திகா (வயது 23). இவர், வீட்டில் இருந்து வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு சென்று வருவதாக கூறி சென்றவர் திரும்பி வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து செல்வம் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து, கார்த்திகாவை யாரும் கடத்தி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்.