தமிழக செய்திகள்

கஞ்சா வைத்திருந்தவர் சிக்கினார்

கிருஷ்ணகிரி மது விலக்கு அமல் பிரிவு போலீசார் வெப்பாலம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் ரோந்து சென்றனர். அங்கு நின்ற வாலிபரை சோதனை செய்தபோது அவர் 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் மூங்கில்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 19) என்பது தெரியவந்தது. இதையடுத்து திருநாவுக்கரசுவை போலீசார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT