தமிழக செய்திகள்

மதுராந்தகத்தில் 24 ; தாராபுரத்தில் 19- நாம் தமிழர், கம்யூனிஸ்ட் உள்பட டெபாசிட் இழந்த வேட்பாளர்கள்

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் ஆளும் கட்சியான தவெக வெற்றி பெற்றது.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் 5 முனை போட்டி நிலவியது. தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர், கம்யூனிஸ்ட்கள் என 5 முனை போட்டி நிலவிய நிலையில், இரு தொகுதிகளிலும் ஆளும் கட்சியான தவெகவே வென்றது. இந்த தேர்தலில் நாம் தமிழர், கம்யூனிஸ்ட் கட்சிகள் டெபாசிட்டையும் பறிகொடுத்துள்ளன. இரு தொகுதிகளிலும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்!

மதுராந்தகத்தில் 24 பேர் டெபாசிட் இழப்பு

மதுராந்தகம் தொகுதியில் பிரதான கட்சி வேட்பாளர்கள் உள்பட 27 பேர் போட்டியிட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 24 பேர் டெபாசிட் இழந்தனர்.

மதுராந்தகம் தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

- மொத்த வாக்காளர்கள் – 2,13,815

- பதிவானவை – 1,84,640

- மரகதம் குமரவேல் (கூ.வெ.க.) – 74,048

- பரந்தாமன் (தி.மு.க.) – 54,008

- கணிதா சம்பத் (அ.தி.மு.க.) – 47,450

- ஞானகி ராமன் (நா.த.க.) – 2,709

- சுகந்தி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) – 1,986

- நோட்டா – 652

தாராபுரத்தில் 19 பேர் டெபாசிட் இழந்தனர்

தாராபுரம் தொகுதியில் பிரதான கட்சி வேட்பாளர்கள் உள்பட 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் இந்திய கம்யூனிஸ்டு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 19 பேர் டெபாசிட் இழந்தனர்.

தாராபுரம் தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

- மொத்த வாக்காளர்கள் – 2,23,306

- பதிவானவை – 1,79,214

- சத்தியபாமா (கூ.வெ.க.) – 66,841

- சுகன்யா (தி.மு.க.) – 57,370

- பானுமதி (அ.தி.மு.க.) – 45,280

- கார்த்திகா (நா.த.க.) – 5,268

- லட்சுமணன் (இ.கம்யூ.) – 1,157

- நோட்டா – 677

SCROLL FOR NEXT