தமிழக செய்திகள்

நெல்லையில் கஞ்சா, செல்போன்கள் பறிமுதல்: 3 பேர் மீது வழக்குப்பதிவு

திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வீரமாணிக்கபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த சேந்திமங்கலத்தை சேர்ந்த இசக்கிராஜா (வயது 18) மற்றும் சிறார் ஒருவர் உட்பட 2 பேரையும் போலீசார் சோதனை செய்தனர்.

அதில் அவர்கள் மறைத்து வைத்திருந்த சுமார் 10 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்து, மேலப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதேபோல் திருநெல்வேலி மாநகரம் டவுண் பகுதியில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது குருநாதன் கோவில் விலக்கு அருகில் சென்று கொண்டிருந்த மகிழ்வண்ணநாதபுரம் பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார்(19) என்பவரை போலீசார் சோதனை செய்தனர்.

அதில் அவர் மறைத்து வைத்திருந்த சுமார் 120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, டவுண் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.