தமிழக செய்திகள்

ரெயிலில் அடிபட்டு கார் டிரைவர் சாவு

தென்காசி அருகே ரெயிலில் அடிபட்டு கார் டிரைவர் இறந்தார். அவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி அருகே ரெயிலில் அடிபட்டு கார் டிரைவர் இறந்தார். அவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் டிரைவர்

தென்காசி அருகே உள்ள சாம்பவர் வடகரையை சேர்ந்தவர் ராமசாமி, விவசாயி. இவருடைய மகன் ராமச்சந்திரன் (வயது 26). இவர் வெளியூரில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் இவர் கொல்லத்தில் இருந்து சென்னை செல்லும் ரெயிலில் தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி செல்லும் பாதையில் அடிபட்டு தலை துண்டான நிலையில் உயிரிழந்து கிடந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமுலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காதல் தோல்வியா?

இறந்து போன ராமச்சந்திரனுக்கும், ஒரு இளம் பெண்ணுக்கும் காதல் இருந்து வந்ததாகவும், அந்தப் பெண்ணிற்கு வேறு ஒருவருடன் சமீபத்தில் திருமணம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது சாவுக்கு வேறு காரணம் உள்ளதா? என்பது பற்றி ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT