தமிழக செய்திகள்

‘கலைஞர் ஆட்சியில் ஊராட்சி தலைவர்களுக்கு கார் வழங்கப்பட்டது’ - சட்டசபையில் சுட்டிக்காட்டிய அமைச்சர் ஷாஜகான்

300-க்கும் அதிகமான ஊராட்சி தலைவர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்பட்டதாக அமைச்சர் ஷாஜகான் குறிப்பிட்டார்.

சென்னை,

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நிகழ்வுகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சட்டமன்றத்தில் இன்று நேரலை குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் ஷாஜகான் பேசியதாவது;-

“சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் தேவை என்ற விவகாரம் தற்போது சர்ச்சையாக பேசப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் 300-க்கும் அதிகமான ஊராட்சி தலைவர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்பட்டது. எனவே இது ஒன்றும் புதிது இல்லை.

அப்போதும் தமிழகத்தின் நிதி நிலைமை இதே போல்தான் இருந்தது. அப்போதெல்லாம் கேள்வி கேட்காமல், இன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்குவதை கேள்வி கேட்பது சரி அல்ல.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.