தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு:இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்கு

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டையில் 21-ந் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணி சேலம் மண்டல கோட்ட தலைவர் சந்தோஷ்குமார் என்பவர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை அவதூறாகவும், தகாத வார்த்தையாலும் பேசினார். இதையடுத்து அவர் மீது தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சக்திவேல் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இந்து முன்னணி நிர்வாகி சந்தோஷ்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

SCROLL FOR NEXT