தர்மபுரி:
தர்மபுரி வெண்ணாம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நந்தினி (வயது 29). அதே பகுதியை சேர்ந்தவர் வைதியா (29). 2 பேரும் உறவினர்கள் அவர். இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் நெருக்கமாக பழகியதாகவும் தெரிகிறது.
இந்தநிலையில் வாலிபர் வைதியா, நந்தினியை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தினி, தன்னை காதலித்து விட்டு, திருமணம் செய்ய மறுக்கும் வைதியா மீது தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வாலிபர் வைதியா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.