தமிழக செய்திகள்

ஊத்தங்கரை அருகேமாட்டை கல்லால் தாக்கி கொன்ற 3 பேர் மீது வழக்கு

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை அடுத்த பாவக்கல் அருகே உள்ள சூரக்கல் மேடு பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 47). இவர் அதே பகுதியில் உள்ள வீரபத்திரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை கடந்த 5 ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவருடைய பக்கத்து நிலத்துக்காரரான அண்ணாதுரை என்பவருக்கும், திருப்பதிக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் அண்ணாதுரை, அவருடைய மனைவி அஞ்சலா, மகள் அம்பிகா ஆகியோர் திருப்பதியின் நிலத்தில் இருந்த விறகை எடுக்க சென்றனர். அப்போது அவர்களுக்கும் திருப்பதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அண்ணாதுரை, அஞ்சலா, அம்பிகா ஆகியோர் சேர்ந்து கல்லால் அங்கிருந்த மாட்டை தாக்கினர். இதுகுறித்து திருப்பதி சிங்காரப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் 3 பேர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT