தமிழக செய்திகள்

2 பேர் மீது வழக்கு

வில்லியனூர் அருகே உள்ள கரிக்கலாம்பாக்கத்தில் திருவிழாவையொட்டி தெருக்கூத்து நிகழ்ச்சியில் தகராறில் ஈடுபட்ட 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

வில்லியனூர் அருகே உள்ள கரிக்கலாம்பாக்கம் கிராமத்தில் கோவில் திருவிழாவையொட்டி தெருக்கூத்து நிகழ்ச்சி நடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த முருகன், சதீஷ் ஆகியோர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் ஜெகநாதன் தட்டிக்கேட்டார். அப்போது 2 பேரும் சேர்ந்து ஜெகநாதனுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.