தமிழக செய்திகள்

கம்பிவேலி சேதம்; 3 பேர் மீது வழக்கு

கம்பிவேலியை சேதப்படுத்தியது தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

சென்னை கே.கே.நகர் வன்னியர் 2-வது தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துக்கனி (வயது 64). இவர் சம்பவத்தன்று நெல்லை பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். அதில், நெல்லை குலவணிகர்புரம் பகுதியில் நாங்கள் அனுபவித்து வந்த 70 செண்டு இடத்தில் பென்சிங் வேலி (கம்பிவேலி) அமைத்து இருந்தோம். அதனை நெல்லையை சேர்ந்த ஜஸ்டீன், இளங்கோ, சங்கரப்பன் ஆகியோர் சேதப்படுத்தியதாக, கூறி இருந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT