தமிழக செய்திகள்

கடலூரில்இருதரப்பினர் மோதல்; கூரை வீட்டுக்கு தீ வைப்பு 8 பேர் மீது வழக்கு

கடலூரில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டபோது கூரை வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது. இதுதொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கடலூர் அடுத்த எம்.புதூரை சேர்ந்தவர் குமரேசன் மனைவி வைத்தீஸ்வரி (வயது 21). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரங்கதுரை (34) என்பவரது குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று முன்விரோதம் காரணமாக இருதரப்பினரும் ஒருவரையொருவர் திட்டி தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. இதற்கிடையே வைத்தீஸ்வரியின் கூரை வீட்டுக்கு மர்மநபர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் வீட்டின் பெரும்பகுதி எரிந்து சேதமானது. இதுகுறித்து இருதரப்பினரும் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் இருதரப்பை சேர்ந்த ரங்கதுரை, சரண்ராஜ், குமரேசன், வைத்தீஸ்வரி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் வைத்தீஸ்வரியின் கூரை வீட்டுக்கு தீ வைத்தவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்