சென்னை,
மயிலம் தொகுதியில் 30,041 வாக்குகள் வித்தியாசத்தில் சி.வி.சண்முகம் வெற்றி பெற்றிருந்ததை எதிர்த்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்டு.
நடந்து முடிந்த சட்டச்பை தேர்தலில், மைலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், 30,041 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரது வெற்றியை எதிர்த்து, வாக்காளர் கமலக்கண்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக எம்.எல்.ஏ சி.வி. சண்முகம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன் மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்திருந்தார். அந்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி, மைலம் எம்.எல்.ஏ. சி.வி.சண்முகத்தின் நிராகரிப்பு மனுவை ஏற்று, அவரது வெற்றியை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.