தமிழக செய்திகள்

பெரம்பூர் வெற்றியை எதிர்த்து வழக்கு: விஜய் மனு தாக்கல் செய்ய அவகாசம்-ஐகோர்ட்டு உத்தரவு

தனக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய முதல்-அமைச்சர் விஜய்க்கு சென்னை ஐகோர்ட்டு அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தேர்தலில் வெற்றி

தமிழ்நாடு சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் முதல்-அமைச்சர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்குத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டார். இவர் பெரம்பூர் தொகு தியில் விஜய் வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ஆர்.டி.சேகர், அந்த தொகுதி வாக்காளர்கள் தினேஷ், லட்சுமிநரசிம்மன் ஆகியோர் தனித்தனியாக தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். அதேபோல, திருச்சி கிழக்குத் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

நிராகரிக்கக் கோரி மனு

இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தரப்பில் மூத்த வக்கீல்கள் ஜி.மாசிலாமணி, ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் ஆகியோர் ஆஜராகி, "இந்த தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். அதற்காக விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதை ஏற்க மறுத்த நீதிபதி, விசாரணையை வருகிற 25-ந்தே திக்கு தள்ளிவைக்கிறேன். அதற்குள் தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

ஆதவ் அர்ஜுனா

அதேபோல, வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக தேர்தல் வழக்கை ஆர்.சிவ ராஜ் என்பவர் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கையும் வருகிற 25-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி வி.லட்சுமிநாராயணன் உத்தரவிட்டார்.