தமிழக செய்திகள்

ஸ்ரீரங்கம் கோவிலின் ரூ.50 கோடி நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு; தி.மு.க. நிர்வாகி அதிரடி கைது

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிலத்தை ஆக்கிரமித்த வழக்கில், முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதை தொடர்ந்து தி.மு.க. நிர்வாகியை திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கோவில் நிலம் ஆக்கிரமிப்பு

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான நிலம் ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ளது. இந்த நிலத்தை திருச்சி மாநகராட்சி மண்டல தலைவரான ஆண்டாளின் கணவரும், ஸ்ரீரங்கம் தி.மு.க. பகுதி செயலாளருமான ராம்குமார் போலி ஆவணங்கள் தயாரித்து தனது பெயருக்கு கிரையம் செய்து, அங்கு தி.மு.க. அலுவலகம் நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதுகுறித்து ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் மாநகர குற் றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில், கோவில் நிலங்களை அபகரித்ததாக தி.மு.க. பகுதிச்செயலாளர் ராம்குமார் மற்றும் பத்மஜா, விஜயா, சவுந்தரராஜன், வெங்கடவரதன் மற்றும் அப்போதைய ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் வனிதா ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிவு செய்தார். மேலும், அவர்களை பிடிக்க உதவி ஆணையர் பரத்சீனிவாசன் தலைமை யில் 2 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தி.மு.க. நிர்வாகி கைது

இதைத்தொடர்ந்து ராம்குமார், சார்பதிவாளர் வனிதா ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த முன்ஜாமீன் மனுக்கள் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கிடையே முன்ஜாமீன் மனு மீதான விசாரணைக்காக தி.மு.க. நிர்வாகி ராம்குமார் நேற்று காலை மதுரைக்கு காரில் புறப்பட்டு சென்றார். திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையம் அருகே அவரது கார் மற்றும் செருப்புகள் கிடந்த நிலையில், அவரை சிலர் கடத்தி சென்றதாக அவரது மனைவி ஆண்டாள் உள்ளிட்ட உறவி னர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில் பஞ்சப்பூர் அருகே ராம்குமாரின் காரை வழிமறித்து அவரை போலீசார் கைது செய்தது தெரியவந்தது. அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

சிறையில் அடைப்பு

இதைத்தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரி சோதனை செய்த பின்னர், நேற்று மாலை திருச்சி ஜே.எம்.1 மாஜிஸ்திரேட்டு அனுஸ்ருதி முன்னிலையில் ராம்குமாரை போலீசார் ஆஜர்படுத்தினர். ராம்குமாரி டம் விசாரணை நடத்திய பின்னர், அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் ராம்குமாரை அழைத்துச்சென்று திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

SCROLL FOR NEXT