தமிழக செய்திகள்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதை எதிர்த்த வழக்குகள் - நாளை விசாரணை

கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடந்து வரும் நிலையில், அரசு வேலை வழங்க எதிர்ப்பு தெரிவித்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

மதுரை,

கடந்த ஆண்டு த.வெ.க. பிரசாரத்தின்போது கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிக்கான ஆணை வழங்குவதற்காக தமிழக முதல்-அமைச்சர் விஜய் நாளை (வெள்ளிக்கிழமை) கரூருக்கு செல்கிறார். தொடர்ந்து அவர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.

இந்த சூழலில், கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்க எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தற்போது அரசு வேலை எதிர்ப்பு தெரிவித்து இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த வழக்குகள் மீதான விசாரணை ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் நாளை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.