தமிழக செய்திகள்

மரவள்ளி கிழங்கு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.2 ஆயிரம் உயர்வு

தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டு, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மரவள்ளி கிழங்கு நடவு செய்யப்பட்டு அறுவடை நடந்து வருகிறது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு விலை டன்னுக்கு ரூ.2 ஆயிரம் வரை உயர்ந்து ரூ.13,500-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

மரவள்ளி கிழங்கு அறுவடை

தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டு, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மரவள்ளி கிழங்கு நடவு செய்யப்பட்டு அறுவடை நடந்து வருகிறது. இந்த நிலையில் அதன் விலை உயர்ந்துள்ளது.

குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும்

இதுகுறித்து அரூர் அன்னை பசுமை பூமி துல்லிய பண்ணை விவசாயிகள் சங்கத் தலைவர் திருமலை கூறுகையில், "மாவுச் சத்து அடிப்படையில், 10 நாட்களுக்கு முன் மரவள்ளி கிழங்கு விலை டன் ரூ.11,500 வரை விற்பனையானது. தற்போது மரவள்ளி கிழங்கு விலை ரூ.2 ஆயிரம் அதிகரித்து ரூ.13,500-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே முத்தரப்பு கமிட்டி அமைத்து மரவள்ளி கிழங்குக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT