சென்னை,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“காவிரி நீர் பங்கீட்டின் சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பை மறு ஆய்வு செய்திட கோறும் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்திடுவோம் எனக் கூறிய கர்நாடக முதல்-மந்திரி, தற்பொழுது அது குறித்து நடவடிக்கையை எடுத்து வருகிறார்.
தமிழகம் கோறும் பற்றாக்குறை கால நீர் பங்கீட்டை கூட கர்நாடக அரசு திறந்து விடுவதில்லை, காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் ஒவ்வொரு கூட்டத்திலும் கர்நாடக போக்கிலேயே தமிழகத்துக்கு நீர் திறந்து விட உத்தரவிடுவதையும், கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருவதையும் சட்டபூர்வமாக அமைந்த ஒன்றியஅரசு வேடிக்கை பார்த்தும் வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக அரசு காவிரி குறித்தான உச்ச நீதிமன்ற தீர்ப்பையே முற்றாக மாறுதல் செய்திட தற்பொழுது முடிவு செய்துள்ளது என்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பாகும். இது இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரானது. இரு மாநில நல்லுறவுக்கு பாதகமானது என்பதை உணர்ந்தும் கர்நாடக அரசு இம்முடிவை எடுத்து இருக்கிறது.
50 ஆண்டுகளுக்கும் மேலான இப்பிரச்சனை தமிழகத்தின் நீண்ட நெடிய போராட்டங்களுக்கு பின் தான் 1990-ல் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 1991-ல் இடைக்காலத் தீர்ப்பு 205 டி.எம்.சி. என உத்தரவிட்ட நிலையில் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து, தீர்ப்புக்கு எதிராக கர்நாடக சட்டமன்ற கூட்டத்தில், காவிரி நீர் கர்நாடகத்துக்கு மட்டுமே சொந்தமானது என்கிற நிலையில், கர்நாடக நீர் பங்கீடு பாதுகாப்புச் சட்டம் 1991 எனும் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது.
இதை சுப்ரீம் கோர்ட்டு கண்டித்து திரும்ப பெற வைத்தது. பின்னர் தமிழகத்தின் நெடிய போராட்டங்களுக்குப் பின், காவிரி நீர்வரத்தின்றி தமிழகம் பாதித்த நிலையில்தான் 2007 ஆம் ஆண்டு நடுவர் மன்றம் தன் இறுதி தீர்ப்பின் மூலம் 192 டி.எம்.சி. தமிழகத்திற்கு வழங்கிட உத்தரவிட்டது. இதையும் ஏற்க மறுத்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்டில் தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில் பத்தாண்டுகளுக்கு பின் 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளிட்ட கீழ் பாசன மாநிலங்களான கேரளா, மற்றும் காரைக்காலுக்கு 177 டி.எம்.சி. நீர் வழங்கிட உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பிலும் மாறுபட்ட நிலையை எடுத்த கர்நாடகத்தை தடுத்திடும் முறையில் தான், இனி 15 ஆண்டுகளுக்கு இடையே மேல் முறையீடு செய்யக்கூடாது, அதுவரை இந்த தீர்ப்பை தான் பின்பற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆகவே சுப்ரீம் கோர்ட்டில் இனி இப்படியான நிலையில் முறையிட முடியாது என்ற முறையில்தான் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு வழங்கப்படுகிற நீரை தீர்ப்பின்படி வழங்காமல் வஞ்சித்து வருகிறது. காவிரி தொழில்நுட்ப ஒழுங்காற்று குழு பரிந்துரையை விட, காவிரி மேலாண்மை ஆணையம் கொடுக்கிற நீர் தீர்ப்பு குறைவாக இருக்கும். இதையும் தொடர்ந்து ஏற்காது மீறி வருகிறது.
கடந்த மாதம் 6000 க.அடி, பின் 4000 க.அடி, அதன்பின் 3000 க.அடி, எல்லாமே ஒரு மாதத்திற்கு உள்ளாக கர்நாடகத்திற்கு இசைவான நிலையில்தான் உத்தரவிட்டது. நடப்பாண்டு இதுவரை 6 கூட்டங்கள் நடந்தும், தமிழகத்திற்கு 81 டி.எம்.சி. நீர் வரவேண்டிய நிலுவை உள்ளது. இது கிடைத்தால் மட்டுமே நிகழ் ஒருபோக நெல் சாகுபடி நடக்கும், வருங்கால குடிநீருக்கே பாதுகாப்பு.
இந்த சூழலில்தான், நீர் பங்கீட்டில் தமிழகத்திற்கு துரோகம் இழைக்கிற கர்நாடக மாநில அரசு, நடுவர் மன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மாற்றி எழுத வேண்டுமென சுப்ரீம் கோர்ட்டு செல்கிறது. இதன் மீது தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை.
த.வெ.க. அரசு ஜூன் 19 அன்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில் எதிர் கட்சிகளின், விவாதங்களுக்கு வாய்ப்பளிக்காது, மேகேதாட் அணை குறித்து நடுவர் மன்றம் அமைத்திட வேண்டும் என்கிற ஒரு புதிய திருத்த தீர்மானத்தை ஒருமனதாக ஒன்றிய அரசுக்கு அனுப்பியதை பிற கட்சிகள்,, விவசாய சங்கங்கள் ஏற்காது அன்றைக்கு எதிர்த்தோம்.
அதை மீண்டும் தற்போது தி.மு.க. வலியுறுத்துவது என்பது காவிரி பிரச்சனையை பின்னோக்கி கொண்டு போகிற செயலாக தான் அமையும். தமிழகம் ஏற்காத மேகதாட் அணைக்கு எதற்கு விசாரணை, விவாதம், நடுவர் மன்றம். இதற்கான விளக்கத்தை தமிழக மக்களுக்கு தி.மு.க.மற்றும் மாநில அரசு கொடுத்திட வேண்டும். மீண்டும் ஒரு நடுவர் மன்றம் என்பது,,கர்நாடகம் தற்போது எழுப்பியுள்ள காவிரி தீர்ப்பில் மறு ஆய்வு என்ற நிலைக்கு ஆதரவாக அமைந்து விடும் என்ற ஆபத்தை அறிய வேண்டும்.
தமிழகத்திற்குரிய நீர் பங்கீட்டை கொடுக்க மறுத்து 75 ஆண்டு காலம் தமிழக மக்கள் போராடி... 35 ஆண்டு காலம் சட்டப் போராட்டம் நடத்தி, தமிழகத்திற்கான குறைந்த நீரைக் கூட வழங்க மறுக்கிற கர்நாடக அரசு,, இன்று தீர்ப்பையே மாற்றிப்பெற துணிந்து இருக்கிறது.

எனவே தமிழக அரசு அனைத்து இயக்கங்களையும் கூட்டி காவிரி பிரசினையில் ஒருநிலையாக்கி ஒன்றிய அரசை சந்தித்து வலியுறுத்திட வேண்டும். கர்நாடக வஞ்சகத்தை வீழ்த்திட சட்ட வல்லுனர்கள் மூலம் உரிய வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்திட வேண்டும்.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் என்பது,,சுய அதிகாரமில்லா ஒன்றிய நீர்வளத்துறை உயர் அலுவவர்களை கொண்டதால்,, நடுநிலை நீர் பங்கீடு... கீழ் பாசன மாநிலங்களுக்கு கிடைக்கவில்லை. தீர்ப்பை அமலாக்கிட மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டுமெனதான் அப்போது தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது.
ஆனால் மத்திய அரசோ, அதிகாரம் இல்லா ஆணையம் என்ற அமைப்பை ஏற்படுத்தியது. ஆகவே ஒவ்வொரு ஆண்டும் நீர் பங்கீட்டில் நியாய நிலை இல்லை. எனவே, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையிலான தன்னாட்சி அதிகாரம் கொண்ட மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என வலியுறுத்திட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோறுகிறது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.