தமிழக செய்திகள்

டெல்லியில் 25-ந்தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 49-வது கூட்டம் டெல்லியில் 25-ந்தேதி கூடுகிறது.

புதுடெல்லி,

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 49-வது கூட்டம் டெல்லியில் அந்த ஆணைய அலுவலகத்தில் வருகிற 25-ந்தேதி நடைபெற இருப்பதாக தக வல்கள் வெளியாகி உள்ளன.

ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலை மையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், காவிரியோடு தொடர்புடைய தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் அதிகாரிகளுக்கு இதுகுறித்த தகவல்கள் அனுப்பப்பட்டு இருப்பதாக தெரிகிறது.