தமிழக செய்திகள்

போலி இந்திய கள்ள நோட்டுகள் வழக்கில் 90 நாட்களுக்குள் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல்

கைப்பற்றப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகள் நிபுணத்துவ ஆய்விற்காக மைசூருவில் உள்ள பாரதிய ரிசர்வ் வங்கி நோட்டு முத்ரன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சென்னை,

போலி இந்திய கள்ள நோட்டுகள் வழக்கில் 90 நாட்களுக்குள் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் அலுவலகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

ரகசிய தகவல்

15.07.2026 அன்று, ரகசிய தகவலின் அடிப்படையில், சென்னை D-1 D-1 திருவல்லிக்கேணி காவல் நிலையத்தின் சிறப்புக் குழுவினர். திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் சோதனை மேற்கொண்டு. ரூ.22,21,300/- மதிப்பிலான போலி இந்திய கள்ள நோட்டுகள் (FICN), வெளிநாட்டு பணம் மற்றும் கைப்பேசிகளை கைப்பற்றினர். இதுதொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலைய குற்ற எண் 218/2026-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை

தொடர்ந்து, 16.07.2026 அன்று மற்றொரு குற்றவாளியிடமிருந்து ரூ.7,500/- மதிப்பிலான போலி இந்திய கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. நாட்டின் பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தன்மையை கருத்தில் கொண்டு. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத் தலைவர் அவர்களின் உத்தரவின்பேரில். 20.07.2026 அன்று இவ்வழக்கு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறைக்கு (CB-CID) மாற்றப்பட்டது. பின்னர், இவ்வழக்கு CBCID CCW குற்ற எண் 1/2026 என மறுபதிவு செய்யப்பட்டது.

குற்றவாளிகள் கைது

சிபிசிஐடி விசாரணையில், குற்றவாளிகள் மேற்கொண்ட மலேசியாவிலிருந்து போலி இந்திய கள்ள நோட்டுகளை பெற்று, அவற்றை இந்தியாவிற்குள் கடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதுதொடர்பாக, பின்வரும் நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

1. ரவிச்சந்திரன் (41), ஒரத்தநாடு, தஞ்சாவூர் மாவட்டம்.

2. சபீக் ரஹ்மான் (37), அண்ணா சாலை, சென்னை.

3. சீனிவாசன் (48), கே.ஆர்.புரம், பெங்களூரு.

4. செய்யது அப்துல் ரஹ்மான் (39), ஆயிரம் விளக்கு, சென்னை.

சிபிசிஐடி விசாரணை

சிபிசிஐடி விசாரணைபோது, 44 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், வங்கி பரிவர்த்தனை பதிவுகள். பயண ஆவணங்கள், கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகள் மற்றும் குற்றவாளிகளின் கைப்பேசிகளிலிருந்து பெறப்பட்ட மின்னணு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன. கைப்பற்றப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகள் நிபுணத்துவ ஆய்விற்காக மைசூருவில் உள்ள பாரதிய ரிசர்வ் வங்கி நோட்டு முத்ரன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

13.10.2026 அன்று. சிபி-சிஐடி கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்கும் எதிராக. பாரதிய நியாய சன்ஹிதா, 2023-இன் பிரிவுகள் 61(2), 179, 180 மற்றும் 238(b)-இன் கீழ், சென்னை எழும்பூரில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (போலி பத்திரம் மற்றும் இந்திய கள்ள நோட்டுகள் வழக்குகள் விசாரணை நீதிமன்றம்) குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

குற்ற வலையமைப்பு

முதல் குற்றவாளி 16.07.2026 அன்று கைது செய்யப்பட்ட நாளிலிருந்து கணக்கிடப்படும் 90 நாட்களுக்குள். பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023-இன் பிரிவு 187(3)-ன்படி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. உரிய சட்ட காலக்கெடுவிற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதன் மூலம். குற்றவாளிகள் சட்டரீதியான பிணையைக் தவிர்க்கப்படுகிறது. மேலும், விசாரணையை அனுமதிக்கிறது. கோருவதற்கான வாய்ப்பு தாமதமின்றி தொடங்க கள்ள நோட்டுக்களைக் கடத்துவதில் தொடர்புடைய விரிவான குற்ற வலையமைப்பு குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT