சென்னை,
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு அவரது வீட்டிற்கு அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்துச் செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி நாகேந்திரன், பொன்னை பாலு உள்பட 27 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதனிடையே, இந்த விவகாரம் தொடர்புடைய மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன், அருண் பாலி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. சி.பி.ஐ. தரப்பில் மூத்த வக்கீல் டி.பி.சிங் ஆஜராகி, ஆம்ஸ்ராங் கொலை வழக்கு விசாரணை நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த கொலை வழக்கில் 10 பேருக்கு செப்டம்பர் மாதம் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. விசாரணை நிலுவையில் இருப்பதால் 10 பேருக்கு அளிக்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்ய விரும்புகிறோம். இந்த 10 பேருக்கும் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புள்ளது.
சிறையிலும் குற்றம் செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்முக்கிய பங்காற்றியுள்ளனர். அவர்களின் ஜாமினை ரத்து செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதை ஏற்ற சுப்ரீம்கோர்ட்டு இதுதொடர்பான மனுவை தாக்கல் செய்ய அனுமதிஅளித்து விசாரணையை நாளைக்கு (வியாழக்கிழமை) தள்ளி வைத்துள்ளது.