தமிழக செய்திகள்

கைதிகளை அழைத்துச் செல்லும் போலீஸ் வாகனங்களில் சிசிடிவி கேமராக்கள்

சிறைக் கைதி​களை அழைத்​துச் செல்​லும் காவல் வாக​னங்​களில் நவீன சிசிடிவி கேம​ராக்​கள் பொருத்​தப்​பட்​டுள்​ளன.

சென்னை,

சென்​னை​யில் கொலை, கொள்​ளை, வழிப்​பறி உள்​ளிட்ட குற்​றச்​செயல்​களில் ஈடு​படும் நபர்​கள், நீதி​மன்ற உத்​தர​வுப்​படி புழல், சைதாப்​பேட்டை உள்​ளிட்ட பல்​வேறு சிறை​களில் அடைக்​கப்​படு​கின்​றனர்.

மேலும், அவர்​கள் தொடர்​பான வழக்​கு​கள் நீதி​மன்​றங்​களில் நடை​பெறும்​போது, காவல் வாக​னங்​களில் அழைத்​துச் செல்​லப்​பட்டு ஆஜர்​படுத்​தப்​படு​கின்​றனர். பின்​னர், அதே வாக​னத்​தில் அழைத்து வந்து மீண்​டும் சிறை​யில் அடைக்​கப்​படு​கின்​றனர். பல நேரங்​களில் வெளி மாவட்ட நீதி​மன்​றங்​களுக்​கும் அழைத்​துச் செல்​லப்​படு​கின்​றனர்.

சில நேரங்​களில், பயங்கர ரவுடிகள் மற்​றும் கொடூர குற்​ற​வாளி​கள் வாக​னங்​களில் நீதி​மன்​றத்​துக்கு செல்​லும்​போது அல்​லது திரும்பி வரும்​போது உடன்​வரும் போலீ​சாருடன் வீண் தகராறில் ஈடு​படு​கின்​றனர். சிலசம​யம் போலீ​சார் தாக்​கப்​படு​கின்​றனர். ஆனால், இதன் உண்​மைத் தன்மை வெளிவரு​வது இல்​லை. யார் மீது தவறு? தாக்​குதல் நடந்​ததற்கு என்ன காரணம் என்​பதை கண்​டறிவ​தில் சிக்​கல் ஏற்​படு​கிறது.

மேலும், நீதி​மன்​றத்​தில் விசா​ரணை முடிந்து வாக​னத்​தில் சிறைக்கு அழைத்​துச் செல்​லும்​போது கைதி​களின் உறவினர்​கள் கஞ்சா பொட்​டலங்​களை காவல் வாக​னங்​களில் வீசும் சம்​பவங்​களும் நடை​பெறுகின்​றன. இத்​தகைய பிரச்​சினை​களைத் தடுக்க போலீ​சார் பல்​வேறு நடவடிக்​கைகளை மேற்​கொண்​டனர். ஆனால், எதிர்​பார்த்த பலன் கிடைக்​க​வில்​லை. இதையடுத்​து, சிறைத்​துறை அதி​காரி​கள் மற்​றும் சென்னை போலீஸ் அதி​காரி​கள் ஒருங்​கிணைந்து ஆலோ​சனை நடத்​தி​ய​தில், கைதி​களை அழைத்​துச் செல்​லும் காவல் வாக​னங்​களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்​யப்​பட்​டது.

அதன்​படி, முதல் கட்​ட​மாக சென்​னை​யில் சிறைக் கைதி​களை அழைத்​துச் செல்​லும் 50-க்​கும் மேற்​பட்ட காவல் வாக​னங்​களில் நவீன சிசிடிவி கேம​ராக்​கள் பொருத்​தப்​பட்​டுள்​ளன.