தமிழக செய்திகள்

அரசு பள்ளிகளில் 13-ந்தேதியே குழந்தைகள் தினம் கொண்டாடவும், கேக் வழங்கவும் அரசு உத்தரவு

கேக் வினியோகம் தொடர்பான பணிகளை ஒருங்கிணைத்து, நிகழ்ச்சி முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய அறிவுறுத்தல் அளிக்கப்பட்டு உள்ளது.

சென்னை

தமிழக அரசு பள்ளிகளில் 13-ந்தேதியே குழந்தைகள் தினம் கொண்டாடவும், கேக் வழங்கவும் அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் மாணவ- மாணவிகளுக்கு 13-ந்தேதியன்று தவறாமல் 'கேக்' வழங்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குழந்தைகள் தினம்

நாடு முழுவதும் நவம்பர் 14-ந்தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படும். எனினும், அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், 13-ந்தேதி அரசு பள்ளிகளில் குழந்தைகள் தினம் கொண்டாட உத்தரவிடப்பட்டு உள்ளது.

அப்போது, குழந்தைகளுக்கு கேக் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும், நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தவும் மாவட்ட வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

கேக் வினியோகம்

கேக் வினியோகம் தொடர்பான பணிகளை ஒருங்கிணைத்து, நிகழ்ச்சி முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய அறிவுறுத்தல் அளிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் என மொத்தம் 61 லட்சம் பேருக்கு கேக் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

SCROLL FOR NEXT