உலக தாய்மொழி தினத்தையொட்டி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பாளையங்கோட்டை மகாராஜா நகரில் உள்ள பார்வையற்றோர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் அய்யப்பன், சங்கர், செல்வகுமார் பரமசிவபாண்டியன், வசந்தி, ஆனந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டையில் உள்ள கண் தெரியாதோர் முதியோர் இல்லத்தில் உள்ள பெண்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.