தமிழக செய்திகள்

புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்

தவறான தகவலை அளித்தாலோ அல்லது கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு தராமல் போனாலோ ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் குலோத்துங்கன் கூறியுள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு கடந்த 17-ந்தேதி தொடங்கி வருகிற 31-ந் தேதி வரை நடந்தது. பொதுமக்கள் தங்களது குடும்ப விவரங்களை ஆன்லைன் மூலம் தாங்களே பதிவு செய்தனர். சுய கணக்கெ டுப்பை நிறைவு செய்த பின் கிடைக்கும் அதற்கான பதிவு எண்ணை கணக்கெடுப்பாளர் வீட்டுக்கு வரும்போது வழங் கினால் தகவல்கள் எளிதாக பெறப்படும். இதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) முதல் வீடு, வீடாக சென்று அதி காரிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு

இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, நேற்று புதுச்சேரியில் துவங்கியது. இதனை கவர்னர் கைலாஷ்நாதன் மக்கள் மாளிகையில் துவக்கி வைத்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டத்தின் இயக்குநர் சுந்தரேஷ் பாபு, சப் கலெக்டர் சுதாகர் மற்றும் இணை இயக்குனர் புவனேஸ்வரி கலந்து கொண்டனர்.

இந்தநிலையில் புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை மக்கள் தொகை கணக்கெ டுப்பு அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-க்கான முதற்கட்ட வீடு பட்டியலிடுதல் பணிக்கான வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது. 1948-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் கீழ் நடத்தப்படும் இந்த பணி நாட்டின் திட்டமிடல், தொகுதிகள் மறுவரையறை மற்றும் பொது கொள்கைகளை திறம்பட செயல்படுத்து வதற்கு மிக அவசியமான ஒன்றாகும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட வீடு பட்டியலிடுதல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு, யூனியன் பிரதே சத்தின் அனைத்து பகுதிகளிலும் (புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம்) நேரடி முறையில் நடத்தப்படும்.

வீடு பட்டியலில் வீட்டு வசதி நிலைகள் குறித்த தரவுகள் சேகரிக்கப்படும். அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி கணக்கெ டுப்பு வீட்டு எண், குடும்பத்தில் வசிக்கும் மொத்த நபர்கள் எண்ணிக்கை. குடும்ப தலைவரின் பெயர், குடிநீரின் முக் கிய ஆதாரம், மின்விளக்கு வசதி, கழிவறை வசதி, கழிவறை வகை. குளியல் வசதி, சமையலறை மற்றும் சமையல் எரிவாயு வசதி, டி.வி.. இணையதள வசதி, தொலைபேசி, செல்போன், ஸ்மார்ட் போன் வசதி, இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள். குடும்பத்தில் உள்கொள்ளப்படும் முக்கிய தானியம் உள்பட 33 கேள்விகள் இடம்பெறும்.

ரூ.1,000 அபராதம்

எனவே அரசு அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான பதில்களை அளிக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள பெண் உறுப்பினரின் பெயரையோ அல்லது கணவர் மற்றும் வழக்கத்தின்படி குறிப்பிட தடை செய்யப்பட்ட நபர்களின் பெயரையோ கூற எவரும் கட்டாயப்படுத்த மாட்டார்கள்.

கணக்கெடுப்பு நோக்கங்களுக்காக அதிகாரிகள் வீடுகளின் வளாகத்திற்குள் வருவதையும், கணக்கெடுப்பு எண்கள் அல்லது குறியீடுகளை இடுவதையும் அனுமதித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த துறையால் சேகரிக்கப்படும் தனிநபர் தகவல்கள் அனைத்தும் சட்டப்பிரிவு 15-ன் கீழ் முற்றிலும் ரகசியமாக பாதுகாக்கப்படும். இவை எந்தவொரு சிவில் அல்லது குற்றவியல் நடவடிக்கைகளிலும் ஆதாரமாக பயன்படுத்தப்படாது.

இந்த பணியின் துல்லியத்தன்மையை உறுதி செய்ய பொதுமக்கள் அனைவரும் கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு தேவையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

விதிமுறைகளின்படி இணக்கமற்ற சூழல் அல்லது வேண்டுமென்றே தவறான தகவல்களை அளிக்கும் பட்சத்தில் சட்ட விதிகளின்படி ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.