தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் ஜூலை 17-ம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி - அரசாணை வெளியீடு

ஜூலை 17-ம் தேதி முதல் தொடங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 45 நாட்கள் நடைபெறுகிறது.

சென்னை,

நாடு முழுவதும் பத்து ஆண்​டு​களுக்கு ஒரு முறை மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​படு​கிறது. கடந்த 2011-ம் ஆண்​டில் நாடு தழு​விய அளவில் மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது. இதன்​ பிறகு 2021-ம் ஆண்​டில் கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டிருக்க வேண்​டும். ஆனால் கொரோனா பெருந்​தொற்று காரண​மாக கணக்​கெடுப்பு பணி தள்​ளிவைக்​கப்​பட்​டது.

இந்த சூழலில் நாடு முழு​வதும் இரு கட்​டங்​களாக மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​படும் என்று மத்​திய அரசு கடந்த ஆண்டு அறி​வித்​தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் வரும் ஜூலை 17ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 45 நாட்கள் நடைபெறும் இந்த கணக்கெடுப்பில் வீட்டின் நிலை, வசதிகள், சொத்துக்கள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட 33 கேள்விகள் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT