சென்னை,
தமிழகத்தில் வரும், 2027 கோடை காலத் தில், மின் தேவை எவ்வ ளவு இருக்கும் என்பது உள்ளிட்ட விபரங்களை, மத்திய மின் துறை வெளியிட்டு, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, தமிழக மின் வாரியத்தை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் தினமும் சராசரியாக, 16,000 மெகா வாட்டாக உள்ள மின் தேவை, கோடை காலத்தில், 20,000 மெகா வாட்டை தாண்டுகிறது. 'எல் நினோ' எனும் காலநிலை மாற்றம் காரணமாக, முதல் முறையாக ஜூலை மாதம் 14ம் தேதி, 21,724 மெகா வாட்டாக அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியது. இம்மாத தொடக்கத்தில் சராசரியாக, 21,000 மெகா வாட் என்ற அளவில் இருந்தது.
இதை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் கிடைக்காததால், மின் பற்றாக்குறை ஏற்பட்டது. பல இடங்களில் மின் வெட்டு செய்யப்பட்ட நிலையில், நெருக்கடியை சமாளிக்க மின்சார சந்தையில், 3,500 மெகா வாட் மின்சாரத்தை, மின் வாரியம் வாங்கியது.
இந்நிலையில், அடுத்த ஆண்டில் ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை தமிழக மின் தேவை எவ்வளவு இருக்கும்; கிடைக்கும் மின்சாரம், மின் பற்றாக்குறை ஏற்படும் மின் பற்றாக்குறை விபரங்களை, மத்திய மின் துறை வெளியிட்டுள்ளது.
மாதம் மின் தேவை கிடைக்கும் மின்சாரம் பற்றாக்குறை
ஜனவரி 18,947 17,559 1,388
பிப்ரவரி 20,502 17,775 2,727
மார்ச் 21,513 17,580 3,933
ஏப்., 23,124 17,580 5,544
மே 17,580 21,567 3,987
ஜூன் 17,580 22,376 4,796
ஜூலை 18,738 24,330 5,592
ஆக., 18,688 24,300 5,612
செப்., 24,350 18,188 6,162
அக்., 22,236 18,188 4,048
தினமும் மாலையில், 1,388 மெகா வாட் முதல், 6,162 மெகா வாட் வரை மின் பற்றாக்குறை ஏற்படும் என்றும், அதை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும், மத்திய மின் துறை அறிவுறுத்தியுள்ளது.