ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நெல்லை யில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா முதல்-அமைச்சர் சிவக்குமாரின் தொடர்ச்சியான பேச்சுக்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்திற்கு துரோகம் இழைக்கும் வகையில் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு மறைமுகமாக மத்திய அரசு துணை போகிறது. இதனை கண்டிக்கிறேன். இதுகுறித்து ம.தி.மு.க.வின் நிலைப் பாடு என்ன என்பது குறித்து நாளை (செவ்வாய்க்கி ழமை) தென்காசியில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் நிவாரணம் வழங்கி முதல்-அமைச்சர் விஜய் மனிதாபிமானத்துடன் செயல்படுகிறார். எங்கும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் நூலகத்துறையில் மிகப்பெரிய ஊழல் நடைபெற் றிருக்கிறது. பெரியார் போன்ற தலைவர்களின் பெயரை கொண்ட நூலகங்கள் மற் றும் அறிவுச் சோலைகளில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்ப டுத்தி கண்ட குப்பைகளை எழுதி ஊழல் செய்துள்ளனர்.
இதுகுறித்து விசாரிக்க கமிஷன் அமைத்து, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமை யான தண்டனை பெற்றுத்தரப்பட வேண்டும். தற்போதைய த.வெ.க. அரசில் பல் வேறு துறைகளில் ஆன்லைன் முறைகள் வந்தபிறகு முறைகேடுகள் தடுக்கப்பட்டிருக்கிறது. இனிவரும் அனைத்து இடைத்தேர்தல்களிலும் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அணியே வெற்றி பெறும். எதிர்காலத்திலும் த.வெ.க. ஆட்சி மல ரும். இவ்வாறு அவர் கூறினார்.