சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
இன்று (29.06.2026) மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக் திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-73க்குட்பட்ட குக்ஸ் சாலையில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ஓட்டேரி நல்லா கால்வாயில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு பணி, அம்மையம்மாள் தெரு-சென்னை உயர்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் பள்ளிக் கட்டடம், வார்டு-74க்குட்பட்ட பெரம்பூர் நெடுஞ்சாலையில் வணிக வளாகக் கட்டடம், ஐதர் கார்டன், 4வது தெருவில் புதிதாக சாலை அமைத்தல், சோமசுந்தரம் நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பூங்கா,
பாஷ்யம் 2வது தெருவில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டுமானப் பணியினையும், வார்டு-75க்குட்பட்ட ஓட்டேரி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சிறு விளையாட்டரங்கம் அமைக்கும் பணி, ஓட்டேரி கால்வாயில் ரோபோடிக் எஸ்கலேட்டர் இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்படும் ஆகாயத்தாமரை அகற்றும் பணி, வார்டு-76க்குட்பட்ட செல்லப்பா தெரு-சென்னை தொடக்கப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் பள்ளிக் கட்டடம், வார்டு-78க்குட்பட்ட டானா தெரு-சென்னை நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் பள்ளிக் கட்டடம் உள்ளிட்ட பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின் போது, மண்டல அலுவலர் ஜி.சொக்கலிங்கம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.