சென்னை,
தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள பிரக்ஞானந்தாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
அமெரிக்காவில் நடைபெற்ற (Grand Chess Tour) போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று, இப்பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார் பிரக்ஞானந்தா!
தனது அசாத்திய திறமை, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் உலக சதுரங்க அரங்கில் இந்தியாவின் கொடியை உயரப் பறக்கச் செய்து, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள பிரக்ஞானந்தாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
உங்கள் வெற்றி தமிழ்நாட்டின் பெருமை, உங்கள் சாதனை இந்தியாவின் பெருமை!
இன்னும் பல வரலாற்று வெற்றிகளைப் படைத்து, உலக அரங்கில் இந்தியாவின் புகழை மேலும் உயர்த்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.