சென்னை,
8 மாவட்டங்களில் நாளை மறுநாள் (23.11.2026) கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை ( 22.11.2026) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் (23.11.2026) கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.