சென்னை,
சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திண்டுக்கல், கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், தேனி, அரியலூர், கோவை, தர்மபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, மதுரை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.