தமிழக செய்திகள்

திருப்பூர் வழியாக இயக்கப்படும் சந்திரகாசி-மங்களூரு ரெயில் சேவையில் மாற்றம்

சந்திரகாசியில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக சாலிமரில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும்.

திருப்பூர்,

சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக சந்திரகாசி-மங்களூரு இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சந்திரகாசி-மங்களூரு சென்டிரல் (வண்டி எண்.22851) விவேக் எக்ஸ்பிரஸ் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) சந்திரகாசியில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக சாலிமரில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும்.

மங்களூரு சென்டிரல்-சந்திரகாசி (22852) விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ் வருகிற 31-ந்தேதி மங்களூருவில் இருந்து புறப்பட்டு, சாலிமரில் நிறுத்தப்படும். சாலிமரில் இருந்து சந்திரகாசிக்கு இயக்கப்படாது. மேற்கண்ட தகவலை ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரி வித்துள்ளார்.

SCROLL FOR NEXT