தமிழக செய்திகள்

சென்னை எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றம்

இணைப்பு ரெயில் தாமதம் காரணமாக ரெயில் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

சேலம்,

சென்னை எழும்பூரில் இருந்து சேலத்துக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் (22153) விழுப்புரம், விருத்தாசலம், சின்னசேலம், ஆத்தூர் வழியாக தினசரி சேலம் வருகிறது.

இந்த ரெயில் நேற்று இரவு 11.55 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படுவதாக இருந்தது. இந்நிலையில், இணைப்பு ரெயில் தாமதமாக வருவதால், இந்த ரெயில் 7 மணி 35 நிமிடங்கள் தாமதமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் என சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

<

> <