தமிழக செய்திகள்

கோவை-மேட்டுப்பாளையம் மெமு ரெயில் சேவையில் மாற்றம்

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

கோவை,

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக கோவை-மேட்டுப்பாளையம் மெமு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

பராமரிப்பு பணி

கோவை ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடை பெற்று வருகிறது. இதனால் கோவை வழியாக இயக்கப்படும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்படும் மேட்டுப் பாளையம்-கோவை மெமு ரெயில் (எண்: 66613) நாளை (புதன்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் வட கோவை ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரெயில் வடகோவை ரெயில் நிலையத்தில் இருந்து கோவை ரெயில் நிலையம் வரை இயக்கப்படாது.

மெமு ரெயில்

கோவை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் கோவை-மேட்டுப்பாளையம் மெமு ரெயில் (எண்: 66614) நாளை மற்றும் நாளை மறுநாள் வடகோவை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 11.57 மணிக்கு புறப்படும். மேற்கண்ட 2 நாட்களும் கோவை-வடகோவை இடையே இயக்கப்படாது. வடகோவை ரெயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும்.

சென்னை எழும்பூர்-மங்களூரு சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்: 16159) நாளை இருகூர்-போத்தனூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப் படும். இதனால் இந்த ரெயில் பீளமேடு, வடகோவை மற்றும் கோவை ஆகிய ரெயில் நிலையங்களில் நிற்காது. அதற்கு பதிலாக நாளை காலை 9.45 மணிக்கு போத்தனூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். மேலும் தன்பாத்-போத்தனூர் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்: 16620) நாளை கோவை ரெயில் நிலையத்திற்கு பதிலாக இருகூர்-போத்த னூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். மேலும் திப்ருகர்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்: 22504) நாளை கோவை ரெயில் நிலையத்தில் நிற்காது. அதற்கு பதிலாக போத்தனூர் ரெயில் நிலையத்தில் காலை 10.47 மணிக்கு நின்று செல்லும். ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்: 13352) நாளை மற்றும் நாளை மறுநாள் கோவை ரெயில் நிலையத்திற்கு பதிலாக போத்தனூர் ரெயில் நிலையத்தில் மதியம் 12.15 மணிக்கு நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT