சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து கே.எஸ்.ஆர் பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12657) அடுத்த மாதம் 19-ந் தேதி 1 மணி நேரம் தாமதமாக கே.எஸ்.ஆர்.பெங்களூரு செல்லும். அதே போல, சென்னை சென்டிரலில் இருந்து கர்நாடகா மாநிலம் அசோகபுரத்திற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16021) அடுத்த மாதம் 22-ந் தேதி 1 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாக அசோகபுரம் சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.