சென்னை,
சென்னை சென்டிரல்-மேற்குவங்கம் இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
“சென்னை சென்டிரலில் இருந்து மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பாய்குரி செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22611) பாகூர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும். அதே போல, நியூ ஜல்பாய்குரியில் இருந்து சென்னை சென்டிரல் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (22612) இன்று (சனிக்கிழமை) முதல் பாகூர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.