திருச்சி,
திருவனந்தபுரம் கோட்டத்தில் பல்வேறு பொறியியல் பணிகள் நடைபெறுவதால், திருச்சி வழியாக செல்லும் பின்வரும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும். குருவாயூர் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16128) இன்று (வியாழக்கிழமை) மற்றும், 11, 12, 13, 14, 15, 16, 18, 19, 20, 21, 22, 23, 25 மற்றும் 26-ந்தேதி வரை கோட்டையம் வழியாக திருப்பி ' விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரெயிலானது எர்ணாக்குளம், சேர்த்தலா, ஆலப்புழா, அம்பலப்புழா, ஹரிப்பாட் சந்திப்பை தவிர்த்து, கோட்டையம், சங்கனாசேரி, திருவல்லா மற்றும் செங்கனூர் வழியாக செல் லும் என்றுஅறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்து உள்ளார்.