சேலம்,
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர்-புட்டிரெட்டிப்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள புதுப்பித்தல் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஜோலார்பேட்டை -ஈரோடு ரெயில் (வண்டி எண் 56107) சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இன்றும் (செவ்வாய்க்கிழமை), வருகிற 16, 23, 30-ந்தேதிகளில் ஜோலார்பேட்டையில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்படும் ஜோலார்பேட்டை-ஈரோடு ரெயில், ஏதாவது ஒரு ரெயில் நிலையத்தில் 25 நிமிடங்கள் நிறுத்தப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.