சென்னை,
சென்னையில் தண்டவாள பராமரிப்பு பணியின் காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மின்சார ரெயில் சேவை ரத்துசெய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரெயில்வே பராமரிப்பு பணி காலை 11 முதல் மாலை 3 மணி வரை மாற்றப்பட்டுள்ளது. இதனால் ரத்து செய்யப்பட்டதில் 8 ரெயில்கள் ' வழக்கமான நேரத்தில் இயக்கப்படும். அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி, மாலை 3.15 மணி, மாலை 3.45 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள், செங்கல்பட்டுக்கு காலை 10.45 மணி புறப்படும் ரெயில், இதேபோல செங் கல்பட்டில் இருந்து காலை 9.30 மணி, மதியம் 2.25 மணிக்கு கடற்கரைக்கு புறப்படும் ரெயில்கள், தாம்பரத்தில் இருந்து காலை 10.45 மணி, மாலை 3.30 மணிக்கு கடற்கரைக்கு புறப்படும் ரெயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.