திருச்சி,
சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட புகழூர் மற்றும் கொடுமுடி இடையே பொறியியல் பணி காரணமாக பாலக்காடு டவுன்-திருச்சி ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி (வண்டி எண் 16844) பாலக்காடு டவுன்-திருச்சி விரைவு ரெயில் நாளை (சனிக்கிழமை) மற்றும் 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6.30 மணிக்கு பாலக்காடு டவுனில் இருந்து புறப்பட்டு கொடுமுடி வரை மட்டுமே இயக்கப்படும்.
பணிகள் முடிந்தபிறகு, இந்த ரெயில் முன்பதிவில்லா சிறப்பு ரெயிலாக கொடுமுடியில் இருந்து திருச்சி ஜங்ஷன் வரை இயக்கப்படும். இந்த தகவலை திருச்சி ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.