சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எர்ணாகுளம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16128) வருகிற 27, 28, 29 ஆகிய தேதிகளில் கோட்டயம் வழியாக இயக்கப்படும். மேலும், இந்த ரெயில் எர்ணாகுளம், ஆலப்புழா ரெயில் நிலையத்தில் நிற்காது. இதே போல, சென்னை சென்டிரலில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22207) வருகிற 29, 30 மற்றும் ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் கோட்டயம் வழியாக இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.