தமிழக செய்திகள்

ஈரோடு வழியாக செல்லும் 5 ரெயில்களின் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணி காரணமாக ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு,

கோவை சந்திப்பு ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற உள்ளன. இதன் காரணமாக ஈரோடு வழியாக செல்லும் 5 ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை (திங்கட்கிழமை) காலை 8.15 மணிக்கு பிலாஸ்பூரில் இருந்து புறப்படும் பிலாஸ்பூர்-எர்ணாகுளம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22815) வருகிற 13-ந்தேதி கோவை சந்திப்பில் நிற்காமலும், 13-ந்தேதி புறப்படும் சென்னை எழும்பூர் -மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16159) 14-ந்தேதி பீளமேடு, கோவை வடக்கு மற்றும் கோவை சந்திப்பு ரெயில் நிலையங்களில் நிற்காமலும் இருகூர்-போத்தனூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

இதேபோல் நாளை (திங்கட்கிழமை) புறப்படும் தன்பாத்-போத்தனூர் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (வண்டி எண் 16620), இன்று (ஞாயிற்றுக்கிழமை) புறப்படும் திப்ருகர்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (வண்டி எண் 22504), 13-ந்தேதி புறப்படும் செகந்திராபாத்-திருவனந்தபுரம் சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (வண்டி எண் 20629) வருகிற 14-ந்தேதி கோவை சந்திப்பில் நிற்காமல் இருகூர்-போத்தனூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT