ஈரோடு,
ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள பெருந்துறை ரெயில்வே யார்டு பகுதியில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையொட்டி கீழ்க்கண்ட ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி எர்ணாகுளம்-டாடா நகர் எக்ஸ்பிரஸ் ரெயில் (18190) நாளை (புதன்கிழமை) திருப்பூர் அருகே உள்ள வாஞ்சிபாளையம் ரெயில் நிலையத்தில் 30 நிமிடம் நின்று அங்கிருந்து புறப்பட்டு செல்லும். மேலும் ஆலப்புழா-தன்பாத் எக்ஸ் பிரஸ் ரெயில் (13352) நாளை திருப்பூர் ரெயில் நிலையத்தில் 30 நிமிடம் நின்று அங்கிருந்து புறப்பட்டு செல்லும். இத்தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.