தமிழக செய்திகள்

மதுரை வழியாக செல்லும் ரெயில் சேவையில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

ரெயில் சேவையில் மாற்றம்

மதுரை கோட்டத்தில் தண்டவாளத்தில் பொறியியல் பணி மேற்கொள்ளப்பட இருப்பதால் சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன. அதன்படி;

* 18-ந்தேதி முதல் வருகிற 23-ந்தேதி வரை செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (எண்:16848) மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை சாலை, காரைக்குடி, புதுக்கோட்டை, கீரனூர் வழியாக திருச்சி வந்து மயிலாடுதுறைக்கு செல்லும். அந்த நாட்களில் கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை வழியாக செல்லாது.

* நாகர்கோவில்-மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ்(எண்:16352) வருகிற 18-ந்தேதி மற்றும் 21-ந்தேதி மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து மும்பை செல்லும். அந்த நாட்களில் திண்டுக்கல் வழியாக செல்லாது.

* கன்னியாகுமரி-ஹவுரா அதிவிரைவு ரெயில் (எண்:12666) வரு கிற 20-ந்தேதி மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து செல்லும். அன்று கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் வழியாக செல்லாது.

* குருவாயூரில் இருந்து நாளை முதல் வருகிற 22-ந்தேதி வரை இரவு 11.15 மணிக்கு புறப்படும் குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (எண்:16128) விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக் கோட்டை வழியாக திருச்சி வந்து செல்லும். அன்று மதுரை, சோழவந்தான், கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல், மணப்பாறை வழியாக செல்லாது.

* கன்னியாகுமரியில் இருந்து வருகிற 19-ந்தேதி காலை 5.15 மணிக்கு ஐதராபாத் புறப்படும் சிறப்பு ரெயில் (எண்:17070) மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து செல்லும். அன்று கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல் வழி யாக செல்லாது.

இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் தெரிவித்துள்ளார்.