தமிழக செய்திகள்

திருச்சி-பாலக்காடு ரெயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர்,

ஈரோடு-திருப்பூர் இடையே ஊத்துக்குளி ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை எளிதாக்கும் வகையில், திருச்சி-பாலக்காடு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்சி-பாலக்காடு (வண்டி எண்.16843) எக்ஸ்பிரஸ் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு ஈரோடுக்கு அருகில் உள்ள ஈங்கூரில் நிறுத்தப்படும். பணிகள் முடிந்த பிறகு ஈங்கூரில் இருந்து பாலக்காடு ரெயில் நிலையத் திற்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.