தமிழக செய்திகள்

திருச்சி -பாலக்காடு ரெயில் சேவையில் மாற்றம்

ஈங்கூரில் இருந்து போத்தனூர் வழியாக பாலக்காடு வரை மாற்றுப்பாதையில் முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும்.

ஈரோடு,

ஈரோடு மற்றும் திருப்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ஊத்துக்குளி ரெயில்வே பணிமனையில், ரெயில்வே பாலம் தொடர்பான என்ஜினீயரிங் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக ஈரோடு வழியாக செல்லும் திருச்சி -பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16843) இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), வருகிற 11, 12-ந்தேதிகளில் திருச்சி சந்திப்பில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு ஈரோடு ஊத்துக்குளி ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ஈங்கூர் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.

சிறப்பு ரெயில்

பணிகள் முடிந்ததும் இந்த ரெயில் ஈங்கூரில் இருந்து போத்தனூர் வழியாக பாலக்காடு வரை மாற்றுப்பாதையில் முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும் என்று சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT